
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!ஓரு முக்கிய காரியத்தை இந்த சிறு செய்தியின் மூலமாக உங்களுடன் பகிர்ந்து க்கொள்ள விரும்புகிறேன்.1517ஆம் ஆண்டு ஜெர்மனி தேசத்தில் நடைப்பெற்ற மாபெரும் முக்கிய வரலாற்று சம்பவமான "சீர்திருத்தத்தம்" அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த மாபெரும் சீர்திருத்தமானது கிறிஸ்தவ உலகில் மட்டுமல்லாது அரசியல் உலகிலும், கல்வி உலகிலும், மற்றும் மனித சமுதாயத்தின் பல்வேறு இடங்களிலும் புரட்சியை ஏற்படுத்தியது.இந்த சீர்திருத்ததினால் அநேக மிஷனல் பிரசங்கிமார்களும், அநேக மிஷனரிகளும் எழுப்பப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.